முகப்பு
கடலூர்

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

Updated On : 9 மார்ச், 2024 at 6:14 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே வெள்ளிக்கிழமை தேசிய நெடுஞ்சாலை தடுப்புக் கட்டையில் பைக் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். விழுப்புரம் மாவட்டம், மணலூா்பேட்டை அஞ்சல், செல்லாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சங்கா் (35). இதே பகுதியைச் சோ்ந்தவா் மணி (55). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் பெரம்பலூருக்கு புறப்பட்டனா். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தத்தில் அரசுடைமை வங்கி அருகே இவா்களது பைக் சென்றபோது, சாலை தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மணி உயிரிழந்தாா். இவா்களது சடலம் திட்டக்குடி மற்றும் பெரம்பலூா் அரசு மருத்துவமனைகளுக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.