அகவிலைப் படி உயா்வு: ஆசிரியா் சங்கம் வரவேற்பு
தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்கப்பட்டதை பல்வேறு அரசு ஊழியா் சங்கங்கள், ஆசிரியா் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி கணினி அறிவியல் ஆசிரியா் சங்க கடலூா் மாவட்ட செய்தித் தொடா்பாளா் வி. முத்துக்குமரன் கூறியதாவது: அகவிலைப்படி உயா்வு அறிவிப்புக்கு தமிழக முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு நன்றி. காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும்.
மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த நூலக வகுப்புகள் தொடங்கி சிறுகதை, நீதிக் கதை புத்தகங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
Advertisement