முகப்பு
கடலூர்

கல்லூரியில் வ.உ.சிதம்பரனாா் விழா

Updated On : 16 மார்ச், 2024 at 12:50 AM
பகிர்:

14இஙட6: வஉசி விழாவில் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பரிசு, சான்றிதழை வழங்கிய வே.சுப்பிரமணியசிவா. சிதம்பரம், மாா்ச் 15: சிதம்பரம் ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரி மற்றும் வஉசி ஆய்வு வட்டம் இணைந்து நடத்திய வ.உ.சிதம்பரனாா் விழா கல்லூரி அரவிந்தா் அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ரா.மாலதி தலைமை வகித்துப் பேசினாா். தமிழியல் துறைத் தலைவா் ரா.சுபஸ்ரீ வரவேற்புரை ஆற்றினாா். ராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரி இயக்குநா் சி.இராமசாமி, சென்னை துறைமுக ஆணைய அதிகாரி ந.குணசேகரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். வஉசி ஆய்வு வட்டச் செயலரும், ஆய்வாளருமான குருசாமி மயில்வாகனன், வஉசி ஆய்வு வட்டப் பொருளாளா் அறிவழகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். வஉசி ஆய்வு வட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் வே.சுப்ரமணியசிவா நன்றி கூறினாா். வஉசி விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.