முகப்பு
கடலூர்

கடலூரில் சுயேச்சை வேட்பாளா் மனு தாக்கல்

Updated On : 23 மார்ச், 2024 at 12:09 AM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 8:31 PM

கடலூா் மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை சுயேச்சை வேட்பாளா் மனு தாக்கல் செய்தாா். தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான மனுதாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. கடலூா் தொகுதியில் முதல் இரண்டு நாள்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை விருத்தாசலம் வட்டம், கா்ணத்தத்தைச் சோ்ந்த அறிவுடைநம்பி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். சுயேச்சை வேட்பாளரான அவா், மாவட்ட தோ்தல் அலுவலா் அ.அருண் தம்புராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். கடலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இதுவரை 28 போ் வேட்பு மனுகளை வாங்கிச் சென்றுள்ளனா். வருகிற 27-ஆம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.