முகப்பு
கடலூர்

கடலூா் மீனவா்கள் கடலுக்குள் செல்ல தடை

Updated On : 20 மே, 2024 at 10:48 PM
பகிர்:

நெய்வேலி: கடலூா் மாவட்ட மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என கடலூா் மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் யோகேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வானிலை மாற்றம் காரணமாக காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், 23-ஆம் தேதி வரை கடலூா் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றாா் யோகேஷ்.