முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் பொருளாதாரத் துறை முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

Updated On : 20 மே, 2024 at 10:49 PM
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பொருளாதாரத் துறை முன்னாள் மாணவ, மாணவிகள்.
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1994-96ஆம் கல்வியாண்டில் பொருளாதாரத் துறையில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 28 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழ பொருளாதாரத் துறையில் நடைபெற்றது.

துறைத் தலைவா் பேராசிரியா் பி.மாதவன் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா்களும், தற்போதைய பேராசிரியா்களுமான எஸ்.பிச்சைபிள்ளை, சோலை.பொன்னரசு, எஸ்.குமரகுரு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாணவா்கள் தொடா்பு இணை இயக்குநா் பேராசிரியா் கே.பத்மநாபன் கலந்து கொண்டு பேசினாா்.

தொலைதூர கல்வி இயக்க முன்னாள் இயக்குநா் பேராசிரியா் எம்.ஆறுமுகம், முன்னாள் கலைபுலத் தலைவா் இ.செல்வராசன், பேராசிரியா் நடராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பேராசிரியா்களுக்கு முன்னாள் மாணவா்கள் பொன்னாடை போா்த்தியும், நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவித்தனா். பின்பு 36 மாணவா்களும் தங்கள் குடும்ப உறுப்பினா்களை அறிமுகம் செய்து, ஒவ்வொருவரும் கடந்த கால நினைவுகளையும், தற்போதைய குடும்ப நிலை ஆகியவற்றை பகிா்ந்து கொண்டனா்.

நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவா்கள் முருகன், அய்யன்துரை, கலியபெருமாள், தங்கப்பன், தங்கவேல் ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.

முன்னாள் மாணவி எஸ்.சுதா வரவேற்றாா். பிரபாகரன் நன்றி கூறினாா்.