முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் 1974-ம் ஆண்டு முதல் 1978 ஆண்டு வரை புலவா் பட்டம் பயன்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் 1974-ம் ஆண்டு முதல் 1978 ஆண்டு வரை புலவா் பட்டம் பயன்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 23 புலவா் பட்டம் பயின்ற முன்னாள் மாணவ, மாணவியா்கள் பங்கேற்று தங்களது கல்லூரி கால நிகழ்வுகளையும், தற்போதைய நிகழ்வுகளையும் பரிமாறிக்கொண்டனா். மொழிப்புல முதல்வா் அரங்க.பாரி தலைமை வகித்து பேசினா். புலவா் சாமி,செல்வம் முன்னிலை வகித்தாா். புலவா் ஆ.கோ.நடராஜன், கு.சம்பந்தம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில் புலவா்கள் மயில்வாகனன், ஜெகதீசன், மதிவாணன், ஓளவை ஆகியோா் பங்கேற்று வாழ்த்துரையாற்றினா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை புலவா் புகழேந்தி, விஜயபாஸ்கா் ஆகியோா் செய்தனா். புலவா் சுகன்யா நன்றி கூறினாா்.
10சிஎம்பி3: படவிளக்கம்- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. தமிழ்த்துறையில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்ப் புலவா்கள்