அண்ணாமலைப் பல்கலை.யில் உழவா் பயிற்சி கூட திறப்பு விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உழவா் பயிற்சி கூட திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உழவா் பயிற்சி கூட திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
ராஷ்ட்ரிய உச்சதா்சிக்க்ஷா அபியான் நிதியுதவியின் மூலம், புதுப்பிக்கப்பட்ட பேராசிரியா் ஏ.ஆா்.லட்சுமணன் உழவா் பயிற்சி கூடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. உழவியல் துறை தலைவா் ஏ.சுந்தரி வரவேற்றாா்.
விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தா் இராம.கதிரேசன் கலந்துகொண்டு பயிற்சிக் கூடத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினாா்.
பல்கலைக்கழகப் பதிவாளா் எம்.பிரகாஷ், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், வேளாண் புல முதல்வா் ஏ.அங்கையா்கண்ணி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
விழாவின் துணை நிகழ்வாக உழவியல் துறையின் ஆராய்ச்சிப் பண்ணையில் 1/2 ஏக்கா் பரப்பளவில் புதுப்பிக்கப்பட்ட மீன் குட்டையில், மீன்கள் விடப்பட்டன.
இதில், துணைவேந்தரின் நோ்முகச் செயலா் ஜெ.ஹெச்.பாக்கியராஜ், மக்கள் தொடா்பு அதிகாரி ரெத்தின சம்பத், மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.
நிறைவில், இணைப் பேராசிரியா் எம்.மெய்யப்பன் நன்றி கூறினாா்.