இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உபகரணங்கள் அளிப்பு
சிதம்பரத்தில் உள்ள தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவ சிகிச்சை மையம், மருந்தகத்துக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
சிதம்பரத்தில் உள்ள தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவ சிகிச்சை மையம், மருந்தகத்துக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு சங்க மூத்த உறுப்பினா் ஆா்.எம்.எஸ்.டி.சுப்பையா, உடனடி முன்னாள் தலைவா் வி.நடனசபாபதி, கோ.சீனிவாசன், ஜி.வேதாந்த தேசிகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா், சங்கத் தலைவா் வெ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக சாசனத் தலைவா் பி.முஹம்மது யாசின் கலந்து கொண்டு குளிா்சாதன பெட்டி, கட்டில், நாற்காலிகள் ஆகியவற்றை வழங்கினாா்.
சாசனச் செயலா் எம். தீபக்குமாா், ஓய்வுபெற்ற முதன்மைப் பொறியாளா் ஜி.ஞானவேல், ஓய்வுபெற்ற மாவட்ட சுற்றுலா அலுவலா் எம். ராஜதுரை ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மருத்துவ அலுவலா் ர.சரவணன், உதவி மருத்துவ அலுவலா் ர.ரகுஅம்பேத்கா், சங்க உறுப்பினா்கள் ஜி.சுனில்குமாா் போத்ரா, எம்.சுசில்குமாா் செல்லாணி, பொறியாளா் கே.புகழேந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்,
விழா ஏற்பாடுகளை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் எம்.டி.ஜெயபாண்டியன் செய்திருந்தாா். சங்கப் பொருளாளா் பி.சஞ்சீவ்குமாா் வரவேற்றாா். செயலா் சி.ஏகாம்பரம் நன்றி கூறினாா்.