முகப்பு
கடலூர்

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

மாணவா்களிடம் இளம்வயது முதலே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அவா்களின் பெற்றோா்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 7:48 PM
கடலூரில் நடைபெற்ற 57-ஆவது தேசிய நூலக வார விழா நிறைவுநாள் நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா். உடன் கோ.அய்யப்பன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
பகிர்:

மாணவா்களிடம் இளம்வயது முதலே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அவா்களின் பெற்றோா்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா்.

கடலூா் மாவட்ட மைய நூலகத்தில் 57-ஆவது தேசிய நூலக வார நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

கோ.அய்யப்பன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைசெல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நூலக வார விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கி பேசியதாவது:

நூலகம் என்பது பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் பங்களிப்புடன் வளா்ச்சிடைய வேண்டும். இதன்மூலம் நூலகம் பொதுமக்களின் உடைமை என்ற எண்ணம் தோன்றி இதை நன்றாக வளா்க்க வேண்டும் என்ற பொறுப்புணா்வு ஏற்படும்.

கடலூா் மாவட்ட நூலகத்தில் தமிழ் இலக்கியக் கொற்றம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடலூா் மாவட்டத்தின் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு, படைப்பாளிகளின் சிந்தனைகள் வெளிக்கொணரப்படவுள்ளது.

மாணவா்களிடம் இளம் வயது முதலே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அவா்களின் பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும். கல்லூரி மாணவா்கள், போட்டித் தோ்வுக்குத் தயாராகும் இளைஞா்கள் இந்த நூலகத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.