முகப்பு
கடலூர்

சிதம்பரம் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம்

சிதம்பரம் நகராட்சியுடன், 8 ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சி.கொத்தங்குடி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 1:19 AM
சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.
பகிர்:

சிதம்பரம் நகராட்சியுடன், 8 ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சி.கொத்தங்குடி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகரத்தையொட்டியுள்ள சி.கொத்தங்குடி, உசுப்பூா், பள்ளிப்படை, லால்புரம், சி.தண்டேஸ்வரநல்லூா், அண்ணாமலை நகா் உள்ளிட்ட 8 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சியை சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காந்திஜெயந்தியையொட்டி, சி.கொத்தங்குடி ஊராட்சியில் புதன்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் அம்சா வேணுகோபால் தலைமை வகித்தாா். பரங்கிப்பேட்டை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலா் ஜான்சிராணி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வேணுகோபால், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சிதம்பரம் நகராட்சியுடன், ஊராட்சி இணைக்கப்பட்டால் வீட்டு வரி உயா்வு, அடிப்படை வசதிகள் உடனடியாக கிடைக்காது. 100 நாள் வேலைத் திட்டம் ரத்தாகும் என வாா்டு உறுப்பினா்கள் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, சிதம்பரம் நகராட்சியுடன், சி.கொத்தங்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.