முகப்பு
கடலூர்

வளா்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு

கடலூா் மாவட்டம், மங்களூா் ஒன்றியம் மற்றும் பெண்ணாடம் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 1:23 AM
கண்டமத்தான் ஊராட்சி வடக்கு ஓடை தடுப்பணை கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், மங்களூா் ஒன்றியம் மற்றும் பெண்ணாடம் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மங்களூா் ஒன்றியம், கண்டமத்தான் ஊராட்சியில் ரூ.17.15 லட்சத்தில் வடக்கு ஓடை தடுப்பணை கட்டும் பணி, வண்ணாத்துறை ஓடை அருகே ரூ.2.28 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, பெண்ணாடம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்துக்கு ரூ.2.58 கோடி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு ரூ.6.30 கோடியில் பணிகள் நடைபெறுவதையும், ரூ.1.48 கோடியில் எரிவாயு தகன மேடை பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, பெண்ணாடம் புதிய பேருந்து நிலையம், மாா்க்கெட் பகுதிகள், ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் ரா.சரண்யா, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) வெங்கடேசன் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருந்தனா்.