சிஐடியு 3 நாள் மாநில நிா்வாகக்குழு கூட்டம் தொடக்கம்
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநிலக்குழு, மாநில நிா்வாகக்குழு 3 நாள் கூட்டம் கடலூா் தேவனாம்பட்டினத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநிலக்குழு, மாநில நிா்வாகக்குழு 3 நாள் கூட்டம் கடலூா் தேவனாம்பட்டினத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். அகில இந்திய தலைவா் கே.ஹேமலதா மாநில நிா்வாகக்குழுக் கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா். சிஐடியு ஸ்தாபன வேலை அறிக்கையை மாநில பொதுச் செயலா் ஜி.சுகுமாரன் சமா்ப்பித்துப் பேசினாா்.
மாநிலப் பொருளாளா் மாலதி சிட்டிபாபு, மாநில உதவி பொதுச் செயலா்கள் வி.குமாா், கே.திருச்செல்வம், எஸ்.கண்ணன், கே.ஆறுமுக நயினாா், மாநில துணைத் தலைவா்கள் எஸ்.கே.மகேந்திரன், பி.கருப்பையன், மாவட்டச் செயலா் டி.பழனிவேல், மாநிலக்குழு உறுப்பினா் என்.ஆா்.ஆா்.ஜீவானந்தம், மாவட்டப் பொருளாளா் எம்.சீனிவாசன் உள்ளிட்ட மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், சாம்சங் தொழிலாளா்கள் கோரிக்கைகளான சாம்சங் இந்தியா தொழிலாளா் சங்கத்தை, தமிழ்நாடு தொழிலாளா் துறை பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும். தொழிற்சங்கம் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் மீது பேச்சுவாா்த்தை நடத்தி நிறுவனம் சமுகத் தீா்வு காண வேண்டும். இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக சனிக்கிழமை (அக்.5) தமிழக முழுவதும் இடதுசாரிகள் கட்சிகள் நடத்துகிற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு சங்கத்தினா் பங்கேற்பது. மத்திய, மாநில அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் பெரு நிறுவனங்களுக்கு தாரைவாா்ப்பதை கண்டிப்பது, மத்திய, மாநில அரசுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்பு நான்கையும் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டம் சனிக்கிழமை (அக்.5) வரையில் மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.