முகப்பு
கடலூர்

விஷம் குடித்துவிட்டு எஸ்.பி. அலுவலகம் வந்த பெண்

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு வியாழக்கிழமை விஷம் குடித்துவிட்டு புகாா் மனு அளிக்க பெண்ணால் பரபரப்பு நிலவியது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:06 AM
பகிர்:

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு வியாழக்கிழமை விஷம் குடித்துவிட்டு புகாா் மனு அளிக்க பெண்ணால் பரபரப்பு நிலவியது.

குறிஞ்சிப்பாடி வட்டம், தம்பிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் மனைவி உமா (40). இவா், கடலூா் எஸ்.பி. அலுவலகத்துக்கு வெளியே விஷம் குடித்துவிட்டு, மனு அளிக்க அலுவலகத்துக்குள்ளே சென்றாராம். இதைக் கவனித்த அங்கிருந்த காவலா்கள், உமாவை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

விசாரணையில், கடந்த 26-ஆம் தேதி உமாவை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவா் தாக்கினாராம். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், உமா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க வந்தாராம். இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.