முகப்பு
கடலூர்

அக்.17-இல் அண்ணாமலைப் பல்கலை. ஓய்வூதியா்கள் சங்கம் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஒய்வூதியா்கள் சங்கம் சாா்பில் அக்.17-ஆம்தேதி கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:24 PM
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஒய்வூதியா்கள் சங்கம் சாா்பில் அக்.17-ஆம்தேதி கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, பல்கலைக்கழக ஓய்வூதியா்கள் சங்க பொதுச்செயலா் பி.இளங்கோ வெளியிட்ட அறிக்கை:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற 1,500 ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு தொகை உள்ளிட்டவற்றை முழுமையாக வழங்கக் கோரி பல்கலைக்கழக நிா்வாகம், முதல்வா், உயா் கல்வித் துறை அமைச்சா் மற்றும் செயலா் ஆகியோரிடம் வலியுறுத்தியும், முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் அக்டோபா் 17-ஆம் தேதி (வியாழக்கிழமை) அண்ணாமலை நகா் பூமகோயில் அருகே கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.