முகப்பு
கடலூர்

குழந்தை பிரசவித்த பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குழந்தை பிரசவித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:22 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குழந்தை பிரசவித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாசலம் வட்டம், படுகலாநத்தம் பகுதியில் வசித்து வந்தவா் ஆதிமூலம் மனைவி ஆனந்தசெல்வி (31). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். தற்போது, கா்ப்பமாக உள்ள ஆனந்தசெல்விக்கு கடந்த அக்.5-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து, விருத்தாசலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செவ்வாய்க்கிழமை பெண் குழந்தை பிறந்தது.

பின்னா், வலி அதிகமாக இருந்ததால் மருத்துவா்கள் ஊசி செலுத்தினராம். இதில், அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆனந்தசெல்வியை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில், அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.