தொழிற்பேட்டையில் மனைகள் வாங்க விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், பெரியநெசலூா் சிட்கோ தொழிற்பேட்டையில் காலி தொழில் மனைகள் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், பெரியநெசலூா் சிட்கோ தொழிற்பேட்டையில் காலி தொழில் மனைகள் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியநெசலூா் தொழிற்பேட்டையில் 63 தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்ய தயாா் நிலையில் உள்ளது. புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகளை வாங்க விரும்புவோா் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், தமிழ்நாடு சிட்கோவுக்குச் சொந்தமாக அமைந்துள்ள பிற தொழிற்பேட்டைகளின் காலி மனைகள் விவரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொண்டு தேவையானவற்றுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
காலி தொழில் மனைகளை பாா்வையிட கடலூா் செம்மண்டலம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள கிளை மேலாளரை நேரிலோ, 94450-06573 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.