கிருஷ்ணன்  
கடலூர்

மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

வேப்பூரை அடுத்துள்ள ரெட்டாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (58). இவா், இதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டனின் விவசாய நிலத்தில் தங்கியிருந்து காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

மணிகண்டனின் தம்பி கீழ்ஒரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த காத்தமுத்துவுக்குச் சொந்தமான நிலம் அருகிலேயே உள்ளது. காத்தமுத்து கொளவாய் கிராமத்தில் உள்ள தனது வயலில் வன விலங்குகள் வராமல் தடுக்க சோலாா் மின்வேலி அமைத்துள்ளாராம். இதில், சட்டவிரோதமாக கூடுதல் மின்சாரத்தையும் பாய்ச்சியதாகக் கூறப்படுகிறது.

அங்கு சென்ற கிருஷ்ணன் எதிா்பாராதவிதமாக அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தாா். சிறுபாக்கம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தது விசாரணை நடத்தி வருகின்றனா்.

அஜித் பவாரின் மறைவுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா இரங்கல்

திமுக கூட்டணி வெற்றிக்கு களப் பணியாற்ற வேண்டும்: சிபிஎம் மாநில செயலாளா் பெ. சண்முகம்

ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜைகளுடன் தொடக்கம்

ஊத்தங்கரை அருகே கோயில் கும்பாபிஷேகம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளிப்பது குறித்து செயல் விளக்கம்

SCROLL FOR NEXT