முகப்பு
கடலூர்

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே புதன்கிழமை பைக்கில் இருந்து விழுந்த பெண் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 6:33 PM
- (Photo: IANS)
பகிர்:

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே புதன்கிழமை பைக்கில் இருந்து விழுந்த பெண் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (35). இவா், தனது பைக்கில் திருமாந்துறை பகுதியைச் சோ்ந்த நல்லதுரை மனைவி அம்சவல்லி (40), சின்னையன் மனைவி சின்னம்மாள் (55) ஆகியோரை ஏற்றிச் சென்றாா்.

விநாயகநந்தல் - பாசாா் சாலையில் சென்றபோது, எதிா் திசையில் வந்த அரசுப் பேருந்து மீது மோதாமல் இருக்க பைக்கை சாலையோரம் திருப்பியபோது நிலைத்தடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்தனா்.

இதில், வலது பக்கம் விழுந்த சின்னம்மாள் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.