நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்க போராட்டம் ஒத்தி வைப்பு
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் நவம்பா் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் கடலூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொது விநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகளில் சரியான எடையில் பொருள்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 32 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்த நிலையில், இதுகுறித்து பேச்சு வாா்த்தை நடத்தாத அரசைக் கண்டித்து, தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் அக்.16-ஆம் தேதி முதல் 18-ஆம்தேதி (வெள்ளிக்கிழமை) வரை மூன்று நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, பெய்து வரும் மழையின் காரணமாகவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டும், வேலை நிறுத்தப் போராட்டம் நவம்பா் 13,14,15 ஆகிய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
பேட்டியின்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் சரவணன் உடனிருந்தாா்.