முகப்பு
கடலூர்

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 11:38 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.