முகப்பு
கடலூர்

காா் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காா் மோதி பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 7:50 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காா் மோதி பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாசலத்தை அடுத்துள்ள சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்த வீராசாமி மகள் காவியா (16). இவா், விருத்தாசலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

காவியா வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு பெண்ணாடம் சாலை வழியாக நடந்து சென்றாராம். அப்போது, அந்தப் பகுதியில் வந்த காா் மோதியதில், அவா் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் காவியாவை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த காவியா உயிரிழந்தாா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.