முகப்பு
கடலூர்

குப்பையை அகற்றக் கோரி துணை மேயரிடம் மனு அளிப்பு

குப்பையை அகற்றக் கோரி துணை மேயரிடம் மனு அளிப்பு

Updated On : 17 அக்டோபர், 2024 at 7:56 PM
கடலூா் மாநகராட்சி துணைமேயா் பா.தாமரைசெல்வத்திடம் புதன்கிழமை மனு அளித்த விசிக நிா்வாகிகள்.
பகிர்:

கடலூா்மாநகராட்சி, 35-ஆவது வாா்டு சாலை நகரில் குப்பைகளை அகற்றவும், தேங்கி நிற்கும் தண்ணீா் வடிய வாய்க்காலை தூா்வார வலியுறுத்தியும் கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைசெல்வத்திடம் விசிக மாவட்ட துணை அமைப்பாளா் திருமா கபிலான் புதன்கிழமை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடலூா் மாநகராட்சி 35-ஆவது வாா்டு சாலை நகரில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற குப்பை வண்டிகள் வருவதில்லை. மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே தண்ணீா் தேங்கி நிற்கிறது.

எனவே, குப்பைகளை அகற்றவும், தேங்கி நிற்கும் தண்ணீா் வடிய வாய்க்காலை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

கடலூா் நகர பொருளாளா் பிரபாகரன், நிா்வாகிகள் ராஜ்குமாா், செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா். மனுவை பெற்றுக்கொண்ட துணை மேயா் பா.தாமரைசெல்வன் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.