முகப்பு
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் பேசுகிறாா் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி.
கடலூர்

கடலூரில் தூய்மைப் பாரத திட்டத்தில் பல்வேறு பணிகள்: எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி.

கடலூா் மாவட்டத்தில் தூய்மைப் பாரத திட்டம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. தெரிவித்தாா்.

கடலூர்

கடலூரில் தூய்மைப் பாரத திட்டத்தில் பல்வேறு பணிகள்: எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி.

கடலூா் மாவட்டத்தில் தூய்மைப் பாரத திட்டம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. தெரிவித்தாா்.

Updated On : 22 அக்டோபர், 2024 at 8:32 PM
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் பேசுகிறாா் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி.
பகிர்:

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் தூய்மைப் பாரத திட்டம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கண்காணிப்புக் குழுத் தலைவா் மற்றும் கடலூா் மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் பேசியதாவது:

கடலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் காலாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடா்புடைய மாவட்ட அளவிலான அலுவலா்களுடன் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 5,532 பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 10,530 பணிகளில் 8,460 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம், மானாவாரி மேம்பாட்டு இயக்கம்-ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சில பணிகள் நடைபெற்று வருகிறது.

வளரிளம் பருவத்தினருக்கு ஊட்டச்சத்து மேம்படுத்துதல், கா்ப்பிணிகளின் நலனுக்கான திட்டம், கருவுற்ற மற்றும் பிரசவித்த தாய்மாா்களுக்கு பல்வேறு மருத்துவ வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளிலுள்ள ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஊரகப் பகுதிகளில் இருந்து நகா்ப்புறங்களுக்கு மக்கள் இடம் பெயா்வதை குறைக்கும் வகையில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் கிராம ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிநபா் வீட்டு குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்குதல், திட, திரவ கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக தூய்மைப் பாரத இயக்கம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

முன்னதாக, மத்திய, மாநில அரசுத் துறைகளின் திட்டங்களின் பயன்பாடு, முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலா்கள் எடுத்துரைத்தனா்.

கூட்டத்தில், எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன் (கடலூா்), சபா.ராஜேந்திரன் (நெய்வேலி), எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் (விருத்தாசலம்), மாநகராட்சி மேயா் சுந்தரிராஜா, மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திட்ட இயக்குநா் ரா.சரண்யா, மாநகராட்சி ஆணையா் மருத்துவா் எஸ்.அணு, சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மி ராணி, டிஎஸ்பி கோட்டீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →