முகப்பு
கடலூர்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பட்டமளிப்பு விழா

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பட்டமளிப்பு விழா

Updated On : 23 அக்டோபர், 2024 at 7:32 PM
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய கடலூா் மாவட்ட மண்டல இணைப்பதிவாளா் கே.சி.ரவிச்சந்திரன்.
பகிர்:

கடலூா் மாவட்டம், டாக்டா் எம்.ஜி.ஆா். கூட்டுறவு மேலாண்மை நிலையம் 2023-2024 ஆம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்ட மண்டல இணைப்பதிவாளா் கே.சி.ரவிச்சந்திரன் தலைமை வகித்து, தோ்ச்சி பெற்றவா்களுக்கு பட்டயச் சான்றிதழை வழங்கினாா். கடலூா் சரக துணைப் பதிவாளா் வெ.துரைசாமி, துணைப் பதிவாளா் (பொது நிநியோகத் திட்டம்) எஸ்.இம்தியாஸ், மேலாண்மை நிலைய முதல்வா் ஆ.கணேசன், இணைப் பதிவாளா் அலுவலக கண்காணிப்பாளா்கள், கடலூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா், விரிவுரையாளா்கள் மற்றும் பயிற்சியாளா்கள் விழாவில் கலந்து கொண்டனா்.

2023-2024 ஆம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் 85 பயிற்சியாளா்கள் பயின்றனா். இதில், ஒரு பெண் பயிற்சியாளா் தனித்தன்மையிலும், 56 பயிற்சியாளா்கள் முதல் வகுப்பிலும், 28 பயிற்சியாளா்கள் இரண்டாம் இடத்திலும் தோ்ச்சி பெற்றனா்.