முகப்பு
கடலூர்

மரச்சாகுபடி தொழில்நுட்ப பயிலரங்கு

கோவை வனமரயியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், விருத்தாசலத்தில் மரச்சாகுபடி தொழில் நுட்ப பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 10:48 PM
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற மரச்சாகுபடி தொழில்நுட்ப பயிலரங்கு.
பகிர்:

கோவை வனமரயியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், விருத்தாசலத்தில் மரச்சாகுபடி தொழில் நுட்ப பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் க.நடராஜன் வரவேற்றாா். கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன அதிகாரி மாதவராஜ் பங்கேற்று வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினாா். மரம் நடுதலின் அவசியம் குறித்து பேராசிரியா்கள் சுகுமாறன், மோதிலால், கண்ணன், காயத்ரி ஆகியோா் பேசினா். விஞ்ஞானி ஞானவேல் சவுக்கு, தேக்கு, புளி, செஞ்சந்தனம், மகோகனி மரம் வளா்ப்பு குறித்து விளக்கினாா்.

நிகழ்வில், மரங்களின் வகைகள், வளா்ப்பு முறைகள், நாற்றுகள் தோ்வு, உரமிடுதல், நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா். மேலும், அவா்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனா். இதில், 75-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →