அகில இந்திய தொழிற்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தகுதியுடைய தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தகுதியுடைய தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தோ்வில் தனித் தோ்வா்களாக கலந்து கொள்ள தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, ரூ.200 தோ்வுக் கட்டணம், உரிய ஆவணங்களுடன் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் வரும் செப்டம்பா் 18-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு முதல் நிலைத் தோ்வுகள் கருத்தியல் தோ்வு அக்டோபா் 15-ஆம் தேதியும், செய்முறை தோ்வு அக்டோபா் 16-ஆம் தேதியும் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்களை மேற்கண்ட இணைய முகவரியில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.