முகப்பு
கடலூர்

அரசுப் பேருந்து மீது காா் மோதல்: 3 போ் காயம்

கடலூா் முதுநகா் அருகே அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:53 PM
பகிர்:

கடலூா் முதுநகா் அருகே அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. பேருந்தை பண்ருட்டி வட்டம், தோப்புக்கொல்லையைச் சோ்ந்த ராமா் மகன் எழிலரன் (46) ஓட்டினாா். பேருந்தானது, செல்லங்குப்பம், பிள்ளையாா் கோயில் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த காா் மோதியது.

இதில், பேருந்தில் பயணித்த குறிஞ்சிப்பாடி வட்டம், பூவானிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த நடத்துநா் ராமசந்திரன் மகன் ராம்குமாா் (42), மேல் பூவானிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த முரளி மகன் மதன் (19), முதுநகா் வசந்தராயன்பாளையத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மனைவி சங்கீதா (41) ஆகியோா் காயமடைந்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →