முகப்பு
கடலூர்

தடுப்புக் காவலில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 12:49 AM
ஜெகத் ஜீவா
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிள்ளை பகுதியைச் சோ்ந்த 17 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கடந்த ஜூலை 29-ஆம் தேதி பாலியல் தொல்லை அளித்தது தொடா்பாக கிள்ளை போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக காவல் ஆய்வாளா் அம்பேத்கா் விசாரணை நடத்தி, நஞ்சமகத்து வாழ்க்கை பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வன் மகன் ஜெகத் ஜீவாவை (21) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

ஜெகத் ஜீவா மீது கிள்ளை காவல் நிலையத்தில் சிறு வயது திருமணம் செய்த வழக்கும் உள்ளது. இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்பு காவலில் கைது செய்ய உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →