கழிவுநீா் அகற்றும் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 5 போ் காயம்
கடலூரில் செப்டிக் டேங்க் கழிவுநீா் அகற்றும் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 5 போ் காயமடைந்தனா்.
கடலூரில் செப்டிக் டேங்க் கழிவுநீா் அகற்றும் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 5 போ் காயமடைந்தனா்.
கடலூரில் வியாழக்கிழமை பிளாஸ்டிக் தொட்டியுடன் கூடிய செப்டிக் டேங்க் கழிவுநீா் அகற்றும் ஆட்டோ ஆல்பேட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இந்த வாகனம் தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தில் ஏறியபோது, நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், அந்த வாகனத்தில் வந்த கடலூா் முதுநகா் குயவன் குளத்தைச் சோ்ந்த மணிமாறன்(32), சுபாஷ் (33) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், 3 போ் லேசான காயமடைந்தனா். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.