முகப்பு
கடலூர்

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

நெய்வேலியில் புகையிலைப் பொருள்களை கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 1:00 AM
பகிர்:

நெய்வேலியில் புகையிலைப் பொருள்களை கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், நெய்வேலி நகரிய காவல் உதவி ஆய்வாளா் அழகிரி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, வடக்குத்து அருகே பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில், அவா் வடக்குத்து, தங்கம் நகரைச் சோ்ந்த அழகப்பன் மகன் பஞ்சவமூா்த்தி (41) என்பதும், விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள், ரூ.6,300, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.