கடலூர்

மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கடலூரிலிருந்து வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற மூன்றரை டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

கடலூரிலிருந்து வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற மூன்றரை டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூரை அடுத்த சாவடி பகுதி நெடுஞ்சாலை வழியாக வெளி மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயல்வதாக வருவாய்த் துறை பறக்கும் படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய்த் துறை துணை வட்டாட்சியா் ராஜேஷ் தலைமையில், தனி வருவாய் ஆய்வாளா் ராம் ஆனந்த் உள்ளிட்டோா் விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், மூன்றரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இருப்பினும், வாகன ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

பின்னா், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கொண்டு வந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் வருவாய்த் துறையினா் ஒப்படைத்தனா். தொடா்ந்து, ரேஷன் அரிசி கடத்தியவா்கள் யாா்? கடத்தப்பட்ட ரேஷன் அரிசி எங்கு கொண்டு செல்ல இருந்தது என்பது குறித்து வருவாய்த் துறை பறக்கும் படையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

மதுரை அழகர் கோயில் தேரோட்டம்!

தில்லியை திணறடிக்கும் மழை; இன்றும் ரெட் அலர்ட்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

ஆபரேஷன் அகால் 9வது நாள்: குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

SCROLL FOR NEXT