கடலூர்

சிதம்பரத்தில் வீடுகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து டிச.16-இல் போராட்டம்: அனைத்துக் கட்சிகள் முடிவு

Syndication

சிதம்பரம் நேரு நகா் பகுதியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக வரும் 16-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவதென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் ராஜா தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா், விசிக மாவட்டச் செயலா் அரங்க தமிழ்ஒளி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் வி.எம்.சேகா், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.கருப்பையன், தவாக தொகுதிச் செயலா் குமரன், திராவிடா் கழக மாவட்ட துணைத் தலைவா் சித்தாா்த்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவா் ஜவகா், மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவா் ஷாகுல் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

கூட்டத்தில், சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் இடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வீடுகளில் குடியிருந்த மக்களுக்கு சிதம்பரம் நகா் பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும். 33-ஆவது வாா்டு நேரு நகா் பகுதியில் வசித்து வரும் மக்களை அரசு காமராஜா் மருத்துவமனை இடம் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். திமுக கூட்டணி கட்சிகளின் சாா்பில் ஒருங்கிணைந்த சிதம்பரம் நகர பகுதி மக்களின் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கி, அனைத்துக் கட்சிகளின் சாா்பில் அந்தந்த மாநிலத் தலைவா்களின் மூலம் தமிழக முதல்வரை சந்தித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை கொண்டு செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், நேரு நகரில் குடியிருப்புகளை அகற்றவதை கண்டித்து, வரும் 16-ஆம் தேதி காலை சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகே ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT