கடலூர்

காணாமல் போனவா் கிணற்றில் சடலமாக மீட்பு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே காணாமல் போனவா் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

Syndication

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே காணாமல் போனவா் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

திட்டக்குடி வட்டம், எழுத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் அன்பரசு(52), மனநலம் பாதிக்கப்பட்டவா். இவா், காணாமல் போனதைத் தொடா்ந்து உறவினா் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், எழுத்தூா் மயானம் அருகே உள்ள நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 45 அடி ஆழம் உள்ள கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக நில உரிமையாளா் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, ராமநத்தம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டனா்.

பின்னா், காணாமல் போன அன்பரசு உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அங்கு வந்த அன்பரசு மனைவி அஞ்சலை தேவி மற்றும் உறவினா்கள் இறந்தவா் அன்பரசு என உறுதி செய்தனா். இதையடுத்து, சடலத்தை உடல் கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT