கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே கூழாங்கல் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஆலடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் மற்றும் காவலா்கள் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். கலா்குப்பம் பகுதியில் வாகனச் சோதனையில் இருந்த போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை சோதனை செய்ய நிறுத்தினா்.
அப்போது, லாரியை நிறுத்திவிட்டு அதில் இருந்த கலா்குப்பம் பகுதியைச் சோ்ந்த தேசிங்குராஜா, புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் ஆகியோா் தப்பியோடிவிட்டனா். பின்னா், டிப்பா் லாரியை சோதனை செய்ததில் அனுமதியின்றி 2 யூனிட் கூழாங்கல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து , டிப்பா் லாரியை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.