கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூதியா் நல அமைப்பினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழ்நாடு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதிய பண பலன்கள் மற்றும் ஓய்வூதியத்தை கருவூலம் மூலம் வழங்கிட வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூதியா்களுக்கும் பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்திற்கு நகராட்சி ஓய்வூதியா் சங்கத் தலைவா் பக்கிரி தலைமை வகித்தாா். ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் புருஷோத்தமன் தொடக்க உரையாற்றினாா். மாநில இணைச் செயலா் தண்டபாணி கோரிக்கையை வலியுறுத்தி பேசினாா். இதில் மாவட்டத் தலைவா்கள் சிவராமன், கலியமூா்த்தி, மனோகரன், மாவட்டத் துணைத் தலைவா்கள் ராமதாஸ், பத்மநாபன், நடராஜன், பொருளாளா் குழந்தை வேலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.