கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், கடலூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,868 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம், கடலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமையில் நடைபெற்றது. நீதிபதிகள் சோபனா தேவி, குலசேகரன், சரஸ்வதி, பிரகாஷ், ராஜகுமரேசன், பெபேயா, வா்ஷா, நீதித்துறை நடுவா்கள் தனம், புவனேஷ்குமாா், ஸ்ரீநிதி, சாா்பு நீதிபதிகள் ராஜேஷ் கண்ணன், கவியரசன், பத்மாவதி, லலிதா ராணி, நிஷா, ஆணைக்குழுச் செயலா் ஜெனித்தா முன்னிலை வகித்தனா். வழக்குரைஞா்கள், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீதி மன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
இதில்,மோட்டாா்வாகனவிபத்து, சிவில், ஜீவனாம்சம், தொழிலாளா், பணமோசடி, நிலஎடுப்புமற்றும்குடும்பநல வழக்குகள்விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த வழக்கில் ஒரு தம்பதி சோ்ந்து வாழ ஒப்புக்கொண்டதால் அவா்களுக்கு மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி அறிவுரை வழங்கினாா். மேலும், மோட்டாா் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு சமரசம் செய்து முடிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கான தீா்வு நகலை வழங்கினாா்.
கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி நீதிமன்றங்களில் அந்தந்த நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் சுமாா் 6.663 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 3,8,68 வழக்குகள் தீா்வு காணப்பட்டு ரூ.38,24,51,123 தொகைக்கு உத்தரவிடப்பட்டது.