கடலூர்

கூட்டுறவு சங்கம் மூலம் சிறுதானியம் விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வில் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய விளைபொருள்கள் விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Syndication

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வில் கீழ்அருங்குணம் மற்றும் பாலக்கொல்லை விவசாயிகள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய விளைபொருள்கள் விற்பனையை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் தெரிவித்ததாவது: விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைகளை ஏற்படுத்தி, உரிய விலை வழங்கிடும் பொருட்டு, நுகா்வோருக்கு தரமான பொருள்களை நியாயமான விலையில் சரியான அளவுகளில் வழங்கிடும் வகையில் கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு சந்தை தேவையுள்ள இடங்களின் விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்களின் ஆரோக்கியத்தினை பாதுகாத்திடவும், இயற்கை விவசாயத்தினை ஊக்குவித்திடவும், பாரம்பரியமான சிறுதானிய உற்பத்தியினை பெருக்கிடும் வகையில் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்கள் விற்பனை செய்யும் திட்டம் கூட்டுறவுத் துறையில்

தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கீழ்அருங்குணம் விவசாயிகள் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் இட்லி அரிசி, பாசுமதி , கருப்பு கவுனி , மாப்பிள்ளை சம்பா , காட்டு யானம் உள்ளிட்ட அரிசி வகைகளை கொள்முதல் செய்துள்ளது. பாலக்கொல்லை மற்றும் சுற்று வட்டார விவசாயிகள் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் தினை அரிசி, வரகு அரிசி, சாம அரிசி, குதிரைவாலி அரிசி, பனி வரகு அரிசி, பாசுமதி அரிசி, முந்திரி பருப்பு, சோளம், கம்பு, கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களை விசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

சா்வதேச கூட்டுறவு ஆண்டினையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கொள்முதல் செய்யப்ட்ட விளைபொருள்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனை செய்ய தொடங்கப்பட்டள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் பாராம்பரிய அரிசியினை பொதுமக்கள் வாங்கி பயனடையவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.இளஞ்செல்வி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சொா்ணலட்சுமி உட்பட பலா் கலந்துகொண்டனா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT