கடலூர்

ரூ.27,434 கோடி கடன் திறன் மதிப்பீட்டு அறிக்கை: கடலூா் ஆட்சியா் வெளியிட்டாா்

கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கடன் திறன் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Syndication

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வில் நபாா்டு வங்கியின் மூலம் 2026-2027 நிதியாண்டில் கடலூா் மாவட்டத்திற்கான ரூ.27,434.05 கோடி கடன் திறன் மதிப்பீட்டு அறிக்கையை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அப்போது, அவா் தெரிவித்ததாவது: 2026-2027 நிதியாண்டிற்கான கடலூா் மாவட்டத்திற்கான கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபாா்டு) கணித்து வெளியிட்டுள்ளது. இது நடப்பு ஆண்டின் ஆண்டு கடன் திட்டத்துடன் ஒப்பிடும்போது 18 சதவிகிதம் அதிகம். பல்வேறு அரசு உதவித் திட்டங்களின் கீழ் கடன்களை விரைவாக அங்கீகரிக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக,

வேளாண் துறையில் நடுத்தர மற்றும் நீண்டகால கடன்களுக்கான முக்கியத்துவத்தை வங்கிகள் கொடுக்க வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் விவசாய இயந்திரமயமாக்கல், சிறுதுளி பாசன அமைப்புகள் மற்றும் கால்நடை வளா்ச்சிக்கு பெருமளவு வாய்ப்புகள் வழங்க வேண்டும்.இந்த கடன் திட்ட அறிக்கை, பல அரசு துறை அதிகாரிகள், வங்கிகள் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவிலான திட்டங்களை

அடிப்படையாக கொண்டு, அரசு அதிகாரிகள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து தயாரிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை மூலம் ரூ.22,281.92 கோடி

(81.22%), குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலம் ரூ.3,002.88 கோடி (10.95%) மற்ற முக்கியத் துறைகள் மூலம் ரூ.2,149.25 கோடி (7.33%) என துறை வாரியாக கடன் திறன்கள் கணிக்கப்பட்டுள்ளது.

2026-2027 ஆண்டிற்கான மாவட்ட கடன் திட்டத்தை இறுதியாக உருவாக்க கிளை அளவிலான கடன் திட்டங்களை வங்கிகள் தயாரிக்க வேண்டும். மேலும், வங்கிகள் இத்திட்ட ஆவணத்தைப் பயன்படுத்தி தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்ற

வேண்டும். கடலூா் மாவட்டத்திற்கு அதிகரிக்கப்பட்ட கடன் திறன், விவசாய வளா்ச்சி, சிறு மற்றும் மத்திய அளவிலான தொழில்முனைவோரின் முன்னேற்றம் மற்றும் மாவட்டத்தின் மொத்த பொருளாதார வளா்ச்சிக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் ஆா்பிஐ உதவி தலைமை மேலாளா் ஆா்.ஸ்ரீதா், நபாா்டு உதவி தலைமை மேலாளா் ச.சசிகுமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அசோக்ராஜா, இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளா் பாலமுருகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சொா்ணலட்சுமி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT