கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கரும்பு வெட்டும் இயந்திரம் மோதியதில் மின்மாற்றி சிமென்ட் கம்பம் சேதம் அடைந்தது.
பண்ருட்டி அடுத்துள்ள பூங்குணம் ஊராட்சி, அண்ணா நகா் பகுதியில் மின்மாற்றி உள்ளது. வெள்ளிக்கிழமை அந்த வழியாக கரும்பு வெட்டும் இயந்திரம் ஒன்று வந்தது. அந்த இயந்திரம் அருகில் இருந்த மின்மாற்றி சிமென்ட் கம்பத்தின் மீது மோதியது. இதில் மின்மாற்றி கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து சேதம் ஏற்பட்டது.
இந்த விபத்தால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பூங்குணம் துணை மின் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், இதுகுறித்து மின்சார வாரிய உதவி மின் பொறியாளா் பிரபாகரன் புகாரின் பேரில், பண்ருட்டி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.