கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துவா்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விடுமுறையையொட்டி, பொதுமக்கள் சுற்றுலாத்தலங்களுக்குச் சென்றனா்.
அந்த வகையில், கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை வந்தனா். அவா்கள் கடற்கரையில் அமா்ந்து கடலின் அழகை ரசித்தனா்.
பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை ஓடி, ஆடி மகிழ்ந்தனா். கடற்கரையில் கூட்டம் அதிகரித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
கடற்கரைக்கு அதிகளவில் பொதுமக்கள் வந்துச் சென்ால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.