சிதம்பரம் ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை
போலீஸாா் சோதனை
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா் (படம்).
சிதம்பரம் இருப்புப் பாதை காவல் நிலைய காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சிதம்பரம் ரயில் நிலைய தண்டவாள பகுதிகள், சென்னை எழும்பூா்- திருச்சி செல்லும் சோழன் அதிவிரைவு ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பயணிகள் தங்கும் அறை, டிக்கெட் கவுன்ட்டா், ஆட்டோ நிறுத்துமிடம், வாகன நிறுத்துமிடங்களில் சோதனை மேற்கொண்டனா்.