முகப்பு
கடலூர்

கடலூா்: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கடலூா் மாவட்டத்தில் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Updated On : 1 ஜனவரி, 2025 at 7:08 PM
சிறப்பு அலங்காரத்தில் சாந்த ஆஞ்சநேயா்.
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கடலூா் மாவட்டத்தில் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கடலூா் செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயா் கோயிலில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலி.

கடலூா் மஞ்சக்குப்பம் புனித அன்னை காா்மேல் ஆலயம், பண்ருட்டி வட்டம் பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலையம் உள்ளிட்ட தேவாலங்களில் செவ்வாய்க்கிழமை இரவில் புத்தாண்டு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. தேவாலயங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.