கடலூா் மாவட்டத்தில் ஜன.13 உள்ளூா் விடுமுறை
சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வருகிற 13-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை விடப்படுவதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிதம்பரம் அருள்மிகு நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்று ஒருநாள் மட்டும் கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
Advertisement
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படும் வருகிற 13-ஆம் தேதி மாவட்ட கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படும் என்றாா் ஆட்சியா் சிபி ஆதித்ய செந்தில்குமாா்.