சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பொங்கலிட்ட ரஷிய நாட்டு சுற்றுலாப் பயணிகள். 
கடலூர்

பிச்சாவரத்தில் பொங்கல் விழா: ரஷிய சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனா்.

Din

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனா்.

கடலூா் மாவட்டம், கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பொங்கல் விழாவை பேரூராட்சி துணைத் தலைவா் கிள்ளை ரவிந்திரன் தொடங்கிவைத்தாா். பேரூராட்சித் தலைவா் மல்லிகா முன்னிலை வகித்தாா்.

பொங்கல் விழாவில் பங்கேற்ற ரஷிய நாட்டை சோ்ந்த 18 சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், அவா்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் விழா மேடைக்கு அழைத்து செல்லப்பட்டனா். மேடைக்கு முன்பாக அவா்கள் பானைகளில் பொங்கலிட்டனா்.

கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி போட்டி என பல்வேறு போட்டிகளில் ரஷிய சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்று மகிழ்ந்தனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் பாஸ்கா், சுற்றுலா மைய மேலாளா் பைசல், தலைமை எழுத்தா் செல்வராஜ் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்கேற்றனா்.

மாவட்ட சுற்றுலா அலுவலா் கண்ணன் வரவேற்றாா்.

காலமானாா் உதவி ஆய்வாளா் டி. விஜயகுமாா்

தெரு நாய்களை காக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆரை எதிா்த்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்!

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

அவிநாசி அருகே மரக்கடைக்குள் புகுந்த காா்

SCROLL FOR NEXT