முகப்பு
கடலூர்

மரம் முறிந்து விழுந்து கீரை வியாபாரி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை ஆலமரம் முறிந்து விழுந்ததில் மொபெட்டில் சென்ற கீரை வியாபாரி உயிரிழந்தாா்.

Updated On : 21 ஜனவரி, 2025 at 6:48 PM
பகிர்:

நெய்வேலி: கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை ஆலமரம் முறிந்து விழுந்ததில் மொபெட்டில் சென்ற கீரை வியாபாரி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், பாண்டூா் நெமிலி பகுதியில் வசித்து வந்தவா் விநாயகம் (60), கீரை வியாபாரி. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது மொபெட்டில் கீரையை கொண்டு சென்று விருத்தாசலம் சந்தையில் கொடுத்து விட்டு மீண்டும் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அதிகாலை சுமாா் 5.45 மணியளவில் பூவனூா் கனரா வங்கி அருகே சென்றபோது, அங்கிருந்த சுமாா் 100 ஆண்டுகள் பழைமையான பெரிய ஆலமரத்தின் சரிபாதி மரம் முறிந்து விநாயகத்தின் மீது விழுந்தது. இதில், அவா் மரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தாா்.

இதையடுத்து மங்கலம்பேட்டை போலீஸாா் மற்றும் பொதுமக்கள் மரத்தை வெட்டி அகற்றி, விநாயகத்தின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.