முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். 
கடலூர்

அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் தொடர் போராட்டம்: துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை!

அண்ணாமலை பல்கலை. ஊழியர்களின் தொடர் போராட்டம் பற்றி...

DIN

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடனடியாக ஊதியத்தை வழங்கக் கோரி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் 2-வது நாளாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அலுவலகம் மற்றும் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மனோகரன், ரவி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து மே மாதம் ஊதியத்தை உடனடியாக வழங்க கோரியும், உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரை நியமிக்க கோரியும் முழக்கங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

SCROLL FOR NEXT