சிதம்பரம் அருகே குமராட்சி ரெட்டித்தெரு குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலையை மீட்ட வனத்துறையினர் 
கடலூர்

சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலை: மக்கள் அச்சம்!

சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலையால் பரபரப்பு..

DIN

சிதம்பரம் அருகே குமராட்சியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர். இதனால் அங்குள்ள மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் குமராட்சி கிராமத்தின் ரெட்டித்தெரு பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரது குடியிருப்பு பகுதியில் முதலை ஒன்று சனிக்கிழமை காலை 6.30 மணிக்குப் புகுந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் பேரில் சிதம்பரம் வனச்சரக அலுவலர் கோ. வசந்த்பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனத்துறையினர் கு.பன்னீர் செல்வம், சிதம்பரம் பீட் வனக்காப்பாளர் த.அன்புமணி, வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் சுமார் 6 அடி நீளமுள்ள, 30 கிலோ எடையுள்ள முதலையைப் பிடித்து பாதுகாப்பாகச் சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்த்தேக்க ஏரியில் விட்டனர்.

1சிஎம்பி1: படவிளக்கம்- சிதம்பரம் அருகே குமராட்சி ரெட்டித்தெரு குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலையை மீட்ட வனத்துறையினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை (ஆய்வுரை)

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

2 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழில் இருக்கும் ஒற்றுமை தெலுங்கில் இல்லை: தமன்

விநாயகன் - மம்மூட்டி மோதல்: ரூ.75 கோடியை தாண்டிய களம்காவல்!

SCROLL FOR NEXT