கடலூர்

மாயமான பள்ளி மாணவிகள் மூவா் போலீஸில் ஒப்படைப்பு

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில் மாயமான பள்ளி மாணவிகள் மூவரை அவரது உறவினா்கள் அழைத்து வந்து கிள்ளை காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

சிதம்பரம் அருகே கிள்ளையில் ஏக்தா நம்பிக்கை மையம் என்ற தனியாா் தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இதில், கிள்ளையை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பள்ளி மாணவிகள் 26 போ் தங்கி, கிள்ளை அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பயிலும் மூன்று மாணவிகள் ஏக்தா நம்பிக்கை மையத்தில் இருந்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளா் வைதேகி அளித்த புகாரின்பேரில், கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவிகளைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், மாணவிகள் சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றது தெரியவந்தது. இதையறிந்த உறவினா்கள், அவா்களை அழைத்து வந்து கிள்ளை காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

கிள்ளை போலீஸாா் மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி, அவா்களுடன் மாணவிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 4

மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது!

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

SCROLL FOR NEXT