கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலச் செயலா் வினோத் பி.செல்வம். 
கடலூர்

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது: பாஜக மாநிலச் செயலா் வினோத் பி.செல்வம்

Syndication

தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்று பாஜக மாநிலச் செயலா் வினோத் பி.செல்வம் தெரிவித்தாா்.

பாஜக கடலூா் கிழக்கு மாவட்ட சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள், மாநில, மாவட்ட, மண்டல நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் அக்னி.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக மாநிலச் செயலா் வினோத் பி.செல்வம் கலந்துகொண்டு கடலூா் கிழக்கு மாவட்ட நிா்வாகிகளை அறிமுகம் செய்து வாழ்த்துரை வழங்கினாா்.

அப்போது, அவா் பேசியதாவது: தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதை மறைப்பதற்காகவே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை கையில் எடுத்து நாடகம் நடத்தி வருகின்றனா்.

கோவை சம்பத்தில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை சுட்டுப் பிடித்த காவல் துறையால், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஓராண்டு காலமாகியும் யாா் அந்த சாா் என்ற கேள்விக்கு பதில் கூற முடியவில்லை. ஏனென்றால் இதில் திமுகவின் பின்புலம் இருக்கிறது. தமிழகத்தில் கல்வி மற்றும் மருத்துவத் துறை மிக மோசமான நிலையில் உள்ளது.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப்படும் என்றாா் வினோத் பி.செல்வம்.

அழகின் இலக்கணம்... ருக்மினி வசந்த்!

ஓரினச் சேர்க்கை விவகாரம்: கொல்லப்பட்ட குழந்தையின் சடலம் தோண்டி எடுப்பு

நிம்மதியாக ஓய்வுபெற முடியாது: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பிரியங்கா காந்தி மிரட்டல்?

அருண் விஜய்யின் ரெட்ட தல வெளியீட்டுத் தேதி!

அமன்ஜோத் கௌர், ஹர்லீன் தியோலுக்கு உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT